Archive

Archive for December, 2010

இது கோபம் இல்லையடி!

December 25, 2010 1 comment

நான் தனித்திருந்தால்…
உற்றவர் இல்லை..
நற்றவராய் வேடமிடும் நரிகளும் இல்லை..
பரியாய் ஓட வேண்டிய நிலையும் இல்லை..
சொற்கள் முள்ளாய் மாற வேண்டியதும் இல்லை..
உணர்வுப்பரிவு ஏமாற்றத்தில் முடிவதும் இல்லை..
இருவர் கூற்றை மற்றவர் காணக் கிடைக்கும் அவலமும் இல்லை..
உன்னை இழக்கும் விருப்பமும் இல்லை..
கோபப்படுதல் குற்றமும் இல்லை..
நட்புப் பிறை நிரந்தரம் இல்லை..
இது இடர்பாடா.. இல்லை இடியா.. சத்தியமாய் விளங்கவில்லையடி எனக்கு..
நிர்கதி தான்.. ஆனாலும் நற்கதி தான்..
நான் தனித்திருந்தால்..

Categories: Personal
Follow

Get every new post delivered to your Inbox.